ரூ.1000-க்குள் கிடைக்கும் ஏர்டெல்லின் 3 மாத ரீசார்ஜ் பிளான்கள்.. எது பெஸ்ட்.?

Published : Dec 04, 2025, 12:30 PM IST
airtel

சுருக்கம்

ஏர்டெல் நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்காக ரூ.1000-க்குள் மூன்று நீண்ட கால திட்டங்களை வழங்குகிறது.

நம் இந்திய நாட்டில் ஜியோவுக்குப் பிறகு அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல். இன்டர்நெட், அழைப்பு, வைஃபை உள்ளிட்ட சேவைகள் மூலம் கோடிக்கணக்கான பயனர்களை இணைக்கும் இந்த நிறுவனம், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு நீண்ட கால டேட்டா திட்டங்களை வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கு ரூ.1000-க்குள் கிடைக்கும் சிறந்த திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

ரூ.859 பிளான் – குறைந்த மாதச் செலவு

ஏர்டெல் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரூ.859 திட்டம் நீண்ட வேலிடிட்டி மற்றும் அதிக விலை மதிப்புள்ள சந்தாக்களுடன் வருகிறது. மாதம் கணக்கில் இதன் செலவு சுமார் ரூ.266 மட்டுமே. இதில்

- வரம்பற்ற லோக்கல் & எஸ்டிடி அழைப்புகள்

- தினமும் 2ஜிபி டேட்டா

- 84 நாட்கள் செல்லுபடியாகும்

- தினமும் 100 SMS

- 5G டேட்டா (முதல்நிலை டேட்டா முடிந்தது பிறகு கிடைக்கும்)

- இலவச ஹாலோ டியூன்ஸ், ரிவார்ட்ஸ் மினி

- 1 வருட Perplexity Pro AI சந்தா உள்ளிட்ட நன்மைகள் உள்ளன.

ரூ.929 பிளான் – அதிக டேட்டா தேவையில்லை

நீங்கள் தினமும் 1GB அல்லது 1.5GB டேட்டாவே போதுமானவர்கள் என்றால் ரூ.929 ரீசார்ஜ் திட்டம் பொருந்தும். மாதந்தோறும் சுமார் ரூ.310 ஆகும். இதில்

- வரம்பற்ற அழைப்புகள்

- தினமும் 1.5ஜிபி டேட்டா

- 90 நாட்கள் வேலிடிட்டி

- 1 வருட Perplexity Pro AI சந்தா கிடைக்கும்.

ஆனால் கவனிக்க வேண்டியது, இதில் OTT சேவைகள் அல்லது SMS நன்மைகள் இல்லை.

ரூ.979 பிளான் – OTT விரும்புபவர்களுக்கு சிறப்பு

ரூ.1000-க்குள் இணையத்தில் அதிகம் நேரம் செலவழிப்பவர்களுக்கும் சீரீஸ்/மூவி ரசிகர்களுக்கும் ரூ.979 திட்டம் நல்ல விருப்பம். இதில்

- 84 நாட்கள் செல்லுபடியாகும்

- தினமும் 2ஜிபி டேட்டா

- தினமும் 100 SMS

- வரம்பற்ற அழைப்புகள்

- 5G டேட்டா

- SonyLiv உட்பட 20 OTT பயன்பாடுகளுக்கு சந்தா, Airtel Xstream Play Premium, ரிவார்ட்ஸ் மினி மற்றும் 12 மாத Perplexity Pro AI வழங்கப்படுகிறது.

எந்த திட்டம் யாருக்கு?

தினசரி அதிக இணையதளம் பயன்படுத்துபவர்கள் ரூ.859 அல்லது ரூ.979 திட்டங்களைப் பார்க்கலாம். மீடியா ஸ்ட்ரீமிங் விரும்புபவர்களுக்கு ரூ.979 திட்டம் ஏற்றது. அதிக டேட்டா தேவையில்லாதவர்களுக்கு ரூ.929 திட்டம் பொருந்தும். இந்த தகவல்கள் Airtel இணையதளத்திலிருந்து பெறப்பட்டவை. ரீசார்ஜ் விலை மற்றும் நன்மைகள் காலத்துக்கு காலம் மாற்றப்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?
நாளை முதல் வேட்டை ஆரம்பம்! சாம்சங் S24 முதல் ஐபோன் வரை... பிளிப்கார்ட் அறிவித்த மெகா ஆஃபர்கள்!