
குறைந்த விலையில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கக்கூடிய ஒரு நல்ல 5G ஸ்மார்ட்போனைத் தேடுபவரா நீங்கள்? உங்கள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒப்போ (Oppo) நிறுவனம் தனது புதிய Oppo A6x 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 13 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் மிலிட்டரி கிரேடு பாதுகாப்பைக் கொண்டுவந்துள்ள இந்த போனின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
Oppo A6x 5G ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது 'ஐஸ் ப்ளூ' (Ice Blue) மற்றும் 'ஆலிவ் கிரீன்' (Olive Green) ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ கடைகளில் இதை வாங்கலாம். விலை விவரம்:
• 4GB RAM + 64GB: ரூ.12,499
• 4GB RAM + 128GB: ரூ.13,499
• 6GB RAM + 128GB: ரூ.14,999 கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால் 3 மாதங்களுக்கு வட்டியில்லாத் தவணை (No-Cost EMI) வசதியும் உண்டு.
பட்ஜெட் போன் என்றாலும் டிசைனில் ஒப்போ சமரசம் செய்யவில்லை. இதில் 6.75 இன்ச் HD+ LCD திரை கொடுக்கப்பட்டுள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) இருப்பதால் ஸ்க்ரோலிங் அனுபவம் மிகவும் ஸ்மூத்-ஆக இருக்கும். வெயிலில் பயன்படுத்தும்போது திரை தெளிவாகத் தெரிய 1,125 nits பிரைட்னஸ் வசதியும் உள்ளது.
இந்த போனின் மிகப்பெரிய பலமே இதன் பேட்டரிதான். இதில் 6,500mAh மெகா பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை தாராளமாகப் பயன்படுத்தலாம். அதை வேகமாக சார்ஜ் செய்ய 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
• கேமரா: பின்புறம் 13MP பிரதான கேமராவும், முன்புறம் 5MP செல்ஃபி கேமராவும் உள்ளது. அன்றாடப் பயன்பாட்டிற்கு இது போதுமானது.
• சிப்செட்: மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Dimensity 6300) ப்ராசஸர் இதில் உள்ளதால், 5G வேகம் மற்றும் கேமிங் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
கூடுதல் சிறப்பம்சங்கள் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் (ColorOS 15), பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர், முக அங்கீகாரம் (Face Unlock) மற்றும் தூசி, தண்ணீரிலிருந்து பாதுகாக்க IP54 தரச்சான்று ஆகியவை இதில் அடக்கம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.