வெயிலை சமாளிக்க புது டெக்னீக்... பழைய டெக்னலாஜிக்கு திரும்பிய சுவாரஸ்யம்!!

Published : May 22, 2019, 12:15 PM ISTUpdated : May 22, 2019, 12:59 PM IST
வெயிலை சமாளிக்க புது டெக்னீக்... பழைய டெக்னலாஜிக்கு திரும்பிய சுவாரஸ்யம்!!

சுருக்கம்

கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க மக்கள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒருவர் தனது காரை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கார் முழுவதும் மாட்டுச் சாணத்தைப் பூசி வெளியிட்ட கார் போட்டோ  வலைதளங்களில் வேகமாக வைரலாகிவிட்டன.

குஜராத்தில் ரூபேஷ் கவுரங்க தாஸ் என்பவர் போட்டோக்களை பதிவிட்டு, நான் பார்த்ததிலேயே மாட்டுச் சாணத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் இவர்தான். இது அம்தாவாத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 45 டிகிரி வெயிலைச் சமாளிக்கவும், கார் சூடாவதைத் தடுக்கவும் திருமதி செஜல் ஷா அவர்கள் தனது கார் முழுவதும் பசு சாணத்தைப் பூசியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இந்த டெக்னிக் பலரை ஆச்சரியப்படுத்தியது. 

இந்த டெக்னிக்கால் வாகனம் நிஜமாகவே வெப்பத்தைத் தாங்குகிறதா என்று மற்ற வாகன ஓட்டிகளும் கேள்வியெழுப்பியுள்ளனர். இது ஒருபுறமிருக்க காரில் பசு சாணமா என்று நெட்டிசன்கள் கேலி செய்யத் தொடங்கிவிட்டனர். கிராமப்புறங்களில் வீடுகளின் சுவர்களிலும் தரையிலும் மாட்டுச் சாணம் பூசப்படுவது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாட்டு சாணம் கிருமிநாசினியாகவும், கொசு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் பதஞ்சலி போன்ற நிறுவனங்கள் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி பல தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

எலான் மஸ்க் ஒரு 'புல்டோசர்'.. சாம் ஆல்ட்மேன் ஜீனியஸ்.. உடைத்து பேசிய மைக்ரோசாப்ட் சிஇஓ!
ஐபோன் 16 ப்ரோ இவ்வளவு கம்மி விலையா? நம்பவே முடியல.. எகிறி குதிக்கும் ஆப்பிள் ஃபேன்ஸ்!