ஏன்  “வாட்ஸ் ஆப்” இயங்காது...? 2017 இல் வாட்ஸ் ஆப்பின் திட்டம் என்ன ?

 |  First Published Dec 27, 2016, 6:30 PM IST



ஏன்  “வாட்ஸ் ஆப்” இயங்காது...? 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் வாட்ஸ் ஆப்பின் திட்டம் என்ன ?

2016 ஆம்   ஆண்டுக்கு  பின்னர் ஒரு சில  மொபைல்களில் வாட்ஸ் ஆப்  இயங்காது என , நாம்  தினந்தோறும்  பல  செய்திகளில்  பார்த்து இருப்போம். சரி எதற்காக  இயங்காது ...?  காரணம் என்ன ? ...இப்படியெல்லாம்  கேள்விகள் எழும் ...பதில்  இதோ ......

Tap to resize

Latest Videos

எதில் இயங்காது  ?

நோக்கியா, பிளாக்பெர்ரி, விண்டோஸ், ஆண்ட்ராய்டு ஆகியவற்றின் பழைய மாடல்களில் மட்டும் வாட்ஸ் ஆப் சேவை செயல்படாது என , வாட்ஸ்  ஆப்பின்   அதிகார  பூர்வ  இணையதளத்திலேயே , கடந்த  நவம்பர்   மாதம்  அறிவிப்பு வெளியானது.

மேலும், ஐ.ஒ.எஸ். இயங்குதளத்தின் பழைய வடிவங்களுக்கும் இது பொருந்தும் என்பது  குறிபிடத்தக்கது.  

ஆண்ட்ராய்டு 2.2,  ஐ.ஓ.எஸ் 6 மற்றும் விண்டோஸ் போன் 7 உள்ளிட்ட பழைய ரகங்களில் இந்த ஆண்டுக்குப் பிறகு வாட்ஸ் ஆப் சேவையைப் பயன்படுத்த இயலாது என்பது  மேலும்  ஒரு  கூடுதல்  தகவல் .

ஏன்  இயங்காது ..?

தற்போதைய  காலக்கட்டத்தில், ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம்  என்று சொன்னாலே, அது  ஆண்ட்ராய்டும்,  மற்றும் ஐ.ஓ.எஸ் மட்டும்  தான்  என  நினைக்க வைக்கிறது. அதாவது நாளுக்கு நாள்  வாட்ஸ்  அப், பல  புதிய சலுகைகளை  வாரி வழங்கு கிறது. அதாவது,  பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அனைத்து சலுகைகளையும் ஒரே  இடத்தில  ( வாட்ஸ் அப் )   கிடைக்கும் வகையில் , பல  வசதிகளை , வாட்ஸ்  அப்பில்  வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி,  சமீபத்தில் கூட,   வாட்ஸ்  அப்பில் வீடியோ   காலிங்  வசதியை  அறிமுகம் செய்யப்பட்டது.

பின்னர் , அனுப்பிய மெசேஜில் கூட,   திருத்தும்  செய்து மீண்டும் அனுப்பும் வசதியை  வாட்ஸ்  ஆப்  அறிமுகம் செய்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது. அதாவது, நாம் தவறுதலாக ஏதாவது மேசெஜை, குரூப்பில் அனுப்பி  இருந்தால்,  அதனை  திருத்தும்  வசதியை  அறிமுகம் செய்துள்ளது  வாட்ஸ் அப்.

 இது  போன்று  பல  வசதியை  நாம் , வாட்ஸ்  அப்பில்  பெற  வேண்டும் என்றால் ,  அட்வான்ஸ்ட் டெக்னாலகி தேவைப்படுகிறது. அதற்கு ஆண்ட்ராய்டும்,  மற்றும் ஐ.ஓ.எஸ்  இயங்குதளத்தில் இயங்கக்கூடிய   ஸ்மார்ட்  போன்கள்  தான்  தேவை படுகிறது.  சாதாரண  போன்களில்  ,  மேற்குறிப்பிட்ட  வசதியை ,  பயன்படுத்த முடியாது  என்பது  தான்  உண்மை ....

போன்  மாற்ற வேண்டுமா...?

ஆமாம்  .... நீங்கள்  பயன்படுத்தும்  போன் , பழைய   மாடல்  போனா ? என   உறுதி படுத்தி கொள்ளுங்கள்.....

உங்கள்  போன்,   எந்த  இயங்குதளத்தில்   உள்ளது என  அறிந்து கொள்ளுங்கள்......

பின்னர்,   புது  மொபைல்   வாங்க  வேண்டுமா  என  ஆராய்ந்து , வாங்கி  கொள்ளுங்கள்......மற்றபடி  வேறு எந்த   காரணமும்  இல்லை.

ஒரு வாட்ஸ்   ஆப்பிற்காக , பயன்பாட்டில்  உள்ள  போனை  மாற்றி தான்  ஆக வேண்டுமா  என்றால்.....  ? வாட்ஸ்  ஆப்  வேண்டும் என்றால் மாற்றி தான்  ஆக  வேண்டும் என்பது  பதில்.......!

 

 

 

 

  

 

 

 

click me!