புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடல் மட்டும் இன்றி லேண்ட் ரோவர் நிறுவனம் டிபெண்டர் SVX மாடலையும் உருவாக்கி வருகிறது.
லேண்ட் ரோவர் நிறுவனம் 8 சீட்டர் டிபெண்டர் 130 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மற்றும் நீண்ட வீல்-பேஸ் கொண்ட லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலின் டீசரை லேண்ட் ரோவர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதன்படி லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடல் மே 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக 2020 வாக்கில் லேண்ட் ரோவர் டிபெண்டர் மாடல் முழுமையாக அப்டேட் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில், தற்போது இதன் 8 இருக்கைகள் கொண்ட புது வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலுக்கான முன்பதிவு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
முன்பதிவு விவரம்:
எனினும், புதிய டிபெண்டர் 130 மாடல் அறிமுக நிகழ்வை தொடர்ந்து முன்பதிவும் துவங்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய தகவல்களின் படி புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலின் வீல்பேஸ் 3300 மில்லிமீட்டராக இருக்கும் என கூறப்படுகிறது. டீசரில் வெளியாகி இருக்கும் ஒற்றை புகைப்படத்தில் 8 சீட்டர் லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடல் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை.
எனினும், லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலின் 8 சீட்கள், மூன்று அடுக்குகளில் 2-3-3 வரிசையில் இடம்பெற்று இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரின் மூன்றாவது அடுக்கிலும் மூன்று பேரும் அமரும் இருக்கை வழங்கப்பட இருப்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட 7 சீட்டர் டிபெண்டர் 110 மாடலில் 2-3-2 முறையில் இருக்கைகள் வழங்கப்பட்டன.
லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடலில் சக்திவாய்ந்த மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
போட்டி மாடல்கள்:
புதிய லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடல் சர்வதேச சந்தையில் ஆடி Q7, பி.எம்.டபிள்யூ. X7, கேடிலக் எஸ்கலேட், நேவிகேட்டர் மற்றும் ஜீப் கிராண்ட் வேகனீர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இந்த மாடல் மட்டும் இன்றி லேண்ட் ரோவர் நிறுவனம் டிபெண்டர் SVX மாடலையும் உருவாக்கி வருகிறது.