ரூ. 21 லட்சம் விலையில் புது மோட்டார்சைக்கிள் அறிமுகம்... என்ன ஸ்பெஷலெ தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : May 24, 2022, 02:10 PM IST
ரூ. 21 லட்சம் விலையில் புது மோட்டார்சைக்கிள் அறிமுகம்... என்ன ஸ்பெஷலெ தெரியுமா?

சுருக்கம்

புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் GT மற்றும் ரேலி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ரேலி என்பது ஆப் ரோடு சார்ந்த மாடல் ஆகும்.   

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடல் இரண்டு வேரியண்ட்கள், நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் விலை ரூ. 19.19 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் டிரையம்ப் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சசைக்கிள் ஆகும். இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 மோட்டாரைச்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 

வேரியண்ட் மற்றும் விலை விவரங்கள்:

2022 டிரையம்ப் டைகர் 1200 GT ப்ரோ ரூ. 19 லட்சத்து 19 ஆயிரம்
2022 டிரையம்ப் டைகர் 1200 GT எக்ஸ்ப்ளோரர் ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம்
2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி ப்ரோ ரூ. 20 லட்சத்து 19 ஆயிரம்
2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி எக்ஸ்ப்ளோரர் ரூ. 21 லட்சத்து 69 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

என்ஜின்:

2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலில் 1160சிசி, இன்லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இவை தவிர டிரையம்ப் டைகர் 1200 மாடலின் முன்புறம் 49 மில்லிமீட்டர் ஷோவா யு.எஸ்.டி. போர்க், பின்புறம் செமி ஆக்டிவ் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் GT ப்ரோ மற்றும் GT எக்ஸ்ப்ளோரர் வெர்ஷன்களில் 200 மில்லிமீட்டர் சஸ்பென்ஷன் டிராவல், ரேலி மற்றும் ரேலி எக்ஸ்ப்ளோரர் வெர்ஷன்களில் 220 மில்லிமீட்டர் சஸ்பென்ஷன் டிராவல் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு 320 மில்லிமீட்டர் புளோட்டிங் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

வேரியண்ட்கள்:

புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் GT மற்றும் ரேலி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ரேலி என்பது ஆப் ரோடு சார்ந்த மாடல் ஆகும். GT வேரியண்ட் டார்மேக் ரைடிங்கிற்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இரு வேரியண்ட்களும் இரு ட்ரிம்களில் கிடைக்கின்றன. டைகர் 1200 GT ப்ரோ மற்றும் ரேலி ப்ரோ மாடல்களில் 20 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டுள்ளன. இவை 400 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. 

ரேலி எக்ஸ்ப்ளோரர் மற்றும் GT எக்ஸ்ப்ளோரர் மாடல்களில் 30 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை 600 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகின்றன. 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

2026-ல் ஸ்மார்ட்போன் விலை எகிறப்போகுது! ஆப்பிள் முதல் சாம்சங் வரை வரப்போகும் 7 முக்கிய மாற்றங்கள்!
சும்மா கன்டென்ட் எழுதினா மட்டும் பத்தாது.. 2025-ல் கம்யூனிகேஷன் துறைக்கு தேவை இதுதான்!