ஸ்டைலிஷ் டீசர்.. எக்கச்சக்க அப்டேட்கள்... விரைவில் இந்தியா வரும் 2022 மாருதி பிரெஸ்ஸா..!

By Kevin Kaarki  |  First Published Jun 20, 2022, 7:19 PM IST

புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் K சீரிஸ் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மாருதி சுசுகி நிறுவனம் மேம்பட்ட சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான பிரெஸ்ஸா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மாடலில் விட்டாரா என்ற பெயரை நீக்க மாருதி சுசுகி முடிவு செய்து உள்ளது. இதன் காரணமாக புது மாடல் மாருதி சுசுகி பிரெஸ்ஸா என்றே அழைக்கப்படுகிறது. புதிய பிரெஸ்ஸா மாடலுக்கான முதல் டீசரை மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

மேலும் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். முன்பதிவு அரீனா விற்பனையகம் மற்றும் ஆன்லைன் தளம் உள்ளிட்டவைகளில் மேற்கொள்ள முடியும். முன்னதாக 2020 வாக்கில் அப்டேட் செய்யப்பட்ட நிலையில், புதிய பிரெஸ்ஸா மாடல் இம்முறை ஸ்டைலிங், அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ரீதியில் மாற்றங்களை பெற்று இருக்கிறது.

Tap to resize

Latest Videos

என்ஜின் விவரங்கள்:

புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் மேம்பட்ட என்ஜின், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 6 ஏர்பேக், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி அல்லது ESP போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மாருதி சுசுகி பிரெஸ்ஸா மாடலில் ஸ்மார்ட் ஹைப்ரிட் K சீரிஸ் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இது 1.5 லிட்டர், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதே என்ஜின் மாருதி XL6 மாடலில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. மேலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் பேடில் ஷிப்டர்கள் வழங்கப்படுகின்றன.

அதிரடி மாற்றங்கள்:

“ஆறே ஆண்டுகளில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கும் பிரெஸ்ஸா மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் அதிக பங்குகளை பெற்று இருக்கிறது. இன்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை முற்றிலும் புது தோற்றத்தில் அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.” 

“முற்றிலும் புதிய பிரெஸ்ஸா, புதிய தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள், டிரைவிங் ஸ்டான்ஸ், அதிரடி தோற்றம் உள்ளிட்ட அப்டேட்களுடன் சந்தையை சீர்குலைக்க தயார் நிலையில் உள்ளது. மாறி வரும் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப, முற்றிலும் புதிய பிரெஸ்ஸா மாடல் ஸ்டைலிஷ் லுக், டெக் அம்சங்களுடன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகி இருக்கிறது. அதிரடியாக உருவாகி இருக்கும் புதிய பிரெஸ்ஸா மாடல் இந்திய சாலைகளை ஆளும் என்பதில் நாங்கள் நம்பிக்கையாக இருக்கிறோம்,” என மாருதி சுசுகி இந்தியா விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 

click me!