எக்கச்சக்க அப்டேட்களுடன் புது லக்சரி மாடல்... இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்த ஆடி...!

By Kevin Kaarki  |  First Published Jun 13, 2022, 3:18 PM IST

ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை கடந்த ஏப்ரல் மாத வாக்கில் வெளியிட்டு இருந்தது.


2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் லக்சரி செடான் மாடல் இந்திய சந்தையில் ஜூலை  12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய A8 L ஃபிளாக்‌ஷிப் செடான் பெயருக்கு ஏற்றால் போல் நீண்ட வீல்பேஸ் கொண்டு உள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை கடந்த ஏப்ரல் மாத வாக்கில் வெளியிட்டு இருந்தது. இதை் தொடர்ந்து மே மாத வாக்கில்  இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கியது.

2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான இந்திய முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி அதற்குள் இந்திய சந்தையில் வெளியாக இருப்பது கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Latest Videos

undefined

டிசைன்:

தோற்றத்தில் புதிய 2022 ஆடி A8 L மாடல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டு உள்ளது. இதன் முன்புறம் சற்று அகலமாகி, சிங்கில் ஃபிரேம் கிரில், குரோம் சரௌண்டிங் உள்ளது. பக்கவாட்டுகளில் ஏர் இண்டேக் உள்ளது. இத்துடன் டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் புதிதாக OLED டெயில் லைட்கள், கஸ்டமைஸ் செய்யக் கூடிய லைட் பேட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கேபினை பொருத்த வரை முன்பை விட ஆடம்பரமாகவும், சௌகரியத்தை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் மேம்பட்ட டேஷ்போர்டு, 10.1 இன்ச் மற்றும் 8.6 இன்ச் அளவுகளில் இரு டிஸ்ப்ளேக்கள், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஃபுல் டிஜிட்டல் விர்ச்சுவல் கிளஸ்டர், மல்டி பன்ஷனல் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

லக்சரி அம்சங்கள்:

பின்புற இருக்கைகளில் அதிக இடவசதி, உயர் ரக அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஆடி A8 L மாடலில் பல்வேறு அட்ஜஸ்ட்மண்ட் ஆப்ஷன்கள், பின்புற பயணிகளுக்கு ஃபூட் ரெஸ்ட், ஹெட்ரெஸ்ட்களை எலெக்ட்ரிக் முறையில் அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.

2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI V6 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 லிட்டர் TFSI என்ஜினும் வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

click me!