கூகுள் மீட் செயலியில் பேக்ரவுண்ட்டை 360 டிகிரி மாற்றக் கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றவர்களைக் கவரும் வகையில், உங்களுக்கான இடத்தை மாற்றிக்கொள்ளலாம்.
பள்ளி, கல்லூரி முதல், பெருநிறுவனங்கள் வரையில் ஆன்லைன் மீட்டிங்கிற்காக Google Meet செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பயனர்களின் வசதிக்கு ஏற்ப பலதரப்பட்ட அம்சங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன. குறிப்பாக மீட்டிங்கில் சாட் செய்யுமிடத்தில் ரேடியோ பட்டன்கள், டிராப்டவுன் உள்ளிட்ட அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், மீட்டிங்கில் பின்புல படங்களை 360 டிகிரி கோணத்தில் வைக்கும் புதிய அம்சம் கூகுள் மீட் செயலியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சமானது ஸ்மார்ட்போனில் உள்ள கைரோஸ்கோப் சென்சாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. எனவே, ஸ்மார்ட்போனில் கூகுள் மீட் செயலியில் மட்டுமே 360 டிகிரி பேக்ரவுண்ட் அம்சம் கிடைக்கப்பெறும். கம்ப்யூட்டரில் கிடைக்காது.
undefined
360 டிகிரி பேக்ரவுண்ட் என்பது அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படங்களாகும். உதாரணத்திற்கு கடற்கரை, கோயில் போன்ற படங்களை பேக்ரவுண்டாக வைத்துக்கொள்ளலாம். இப்போது ஸ்மார்ட்போனை இடதுபுறம், வலதுபுறம் திருப்பினால், கோயிலின் உருவமும் முப்பரிமாண தோற்றத்தில், கோயிலின் பக்கவாட்டு தோற்றங்கள் தெரியும். இதே போல் மேல்புறம், கீழ்புறம் சாய்த்தால் தரையும் வானமும் காட்டப்படும்.
OnePlus 11 5G எப்படி இருக்கு? நீடித்து உழைக்குமா? இதோ முழு விவரங்கள்!
சுருக்கமாக சொல்லப்போனால், கூகுள் மீட்டிங்கில் 360 டிகிரி பேக்ரவுண்ட் வைத்து விட்டு, உங்கள் கேமராவை ஆன் செய்தால், நீங்களும் கோவிலில் இருப்பது போன்ற பிம்பமாக இருக்கும். இதன் மூலம் மீட்டிங்கில் உள்ள மற்றவர்கள் முன்பு, தனித்துவமாக தெரியலாம். ஆனால், இந்த அம்சம் ஸ்மார்ட்போனில் மட்டும் இருப்பதால், கம்ப்யூட்டர் மூலம் கூகுள் மீட் இருப்பவர்களால் 360 டிகிரி பேக்ரவுண்ட் வைக்க முடியாது.