Airtel வாடிக்கையாளர்களே.. இப்படி ஒரு ரீசார்ஜ் பிளான் உங்களுக்கு தெரியமா?

By Asianet Tamil  |  First Published Feb 17, 2023, 11:48 PM IST

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 149 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் SonyLIV, LionsgatePlay உட்பட 15 க்கும் மேற்பட்ட OTT சேனல்களை இலவச பார்க்கலாம். இதுகுறித்த முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.


இந்தியாவில் ஜியோவுக்கு நிகராக ஏர்டெல் நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெலில் அதிகப்படியான OTT தளங்களைப் பார்ப்பதற்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்தத் பிளான்கள் ரூ. 399 முதல் தொடங்குகின்றன. இருப்பினும், குறிப்பிட்ட சில OTT தளங்கள் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கும் பயனர்களுக்கு இந்த பிளான் விலை சற்று உயர்ந்ததாக தெரியும். அவர்களுக்காகவே  ஏர்டெல் ஒரு சிறப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது, இது 15 க்கும் மேற்பட்ட OTT சேனல்களுக்கான அணுகலை வழங்குகிறது.

ரூ. 149 விலையில் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று உள்ளது. இதில்  சோனி லிவ், லயன்ஸ்கேட்ப்ளே, ஹோய்ச்சோய் என பல OTT சேனல்களுக்கான இலவச சந்தா  கொண்டுள்ள Airtel Xstreme செயலிக்கான இலவச பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. எனவே OTT நன்மைகளை விரும்பும் பயனர்கள், குறைந்த விலையில் அதாவது  ரூ.149 ரீசார்ஜ் பிளானை வாங்கலாம். ஆனால் இதில் ஒரே ஒரு சிக்கல் உள்ளது. இது வழக்கமான ரீசார்ஜ் பிளான் கிடையாது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்க்கான கட்டணம் ஆகும். எனவே பயனர்கள் வாய்ஸ்கால், இன்டர்நெட்டிற்கு தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். உங்களிடம் ஏற்கெனவே ரீசார்ஜ் பேக் இருந்தால், கூடுதலாக 149 ரீசார்ஜ் செய்து மேற்கண்ட பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

undefined

ஏர்டெல் ரூ.149 டேட்டா திட்ட விவரங்கள்:

ஏர்டெல் 1ஜிபி டேட்டாவை மற்ற நெட் பேக்கைப் போலவே வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதனப்டி, 30 நாட்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் இதில் அடங்கும். இந்த பேக்கில் SonyLIV, Eros Now, ShemarooME, Hoichoi, Ultra, LionsgatePlay, Epicon, ManoramaMax, Dollywood Play, Divo, Klikk, Namaflix, HungamaPlay, Docubay, SocialSwag, ShortsTV, Chaupal, Kanccha போன்ற 15 OTTகளுக்கான அணுகல் அடங்கும். 

இதற்கிடையில், ஏர்டெல் மேலும் ஒரு டேட்டா ஆட்-ஆன் பேக்கை இதே விலையில் கொண்டுள்ளது, இது அதிக டேட்டா மற்றும் Airtel Xtreamக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.148 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீமிற்கு 28 நாட்களுக்கு இலவச சந்தாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இப்படி செய்தால் போதும்.. உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம்!

ஏர்டெல் ரூ.148 டேட்டா திட்ட விவரங்கள்

இந்த ப்ரீபெய்ட் டேட்டா ஆட் ஆன் திட்டமானது 15ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.. கூடுதல் பலன்களைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தில் 28 நாட்களுக்கு Xtream செயலிக்கான இலவச சந்தாவும் அடங்கும், ஆனால் பயனர்கள் ஏதாவது 1 சேனலை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். எனவே அனைத்து 15 சேனல்கள் இருந்தாலும்,, இந்த திட்டம் ஒரு OTT பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசமாக வழங்கும்.
 

click me!