வாட்ஸ்அப் புது அப்டேட்! இனிமே குரூப் அட்மின்கள் மனசு வச்சா தான் இது நடக்கும் - முழு விபரம்

By Raghupati R  |  First Published Apr 25, 2023, 12:22 PM IST

வாட்ஸ்அப் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் தொடர்பான இந்த அப்டேட் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.


மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல நிறுவனமான வாட்ஸ்அப் அடிக்கடி புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

வாட்ஸ்அப் குழுவில் புதிய பங்கேற்பாளர்களை எவ்வாறு அங்கீகரிப்பது என்பதை நிர்வகிக்க உதவும் வகையில் குழு நிர்வாகிகளுக்கான குழு அமைப்பை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சத்தின் மூலம், குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான ஒப்புதல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை குழு நிர்வாகிகள் தீர்மானிக்க முடியும்.

Tap to resize

Latest Videos

மேலும் குழு நிர்வாகிகள் விரும்பிய உறுப்பினர்கள் மட்டுமே குழுவில் சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த உதவுகிறது. வாட்ஸ்அப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான WABetaInfoன் கூற்றுப்படி, இந்த அம்சம் இயக்கப்பட்டால், புதிய உறுப்பினர்கள் குழுவில் சேருவதற்கு முன்பு குழு நிர்வாகியால் அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்கள் குழு அழைப்பு இணைப்பைப் பயன்படுத்தினாலும், அவர்கள் குழுவில் உடனே சேர முடியாது.

அவர்களை அங்கீகரித்த பின்புதான் சேர முடியும். கடந்த காலங்களில், சோசியல் மீடியா பயனாளர்களுக்கு இது முக்கிய பிரச்னையாக இருந்தது. புதிய பங்கேற்பாளர்களை நிர்வகிக்க குழு நிர்வாகிகளுக்கு உதவும் குழு அமைப்பு, ஆப் ஸ்டோரிலிருந்து WhatsAppன் சமீபத்திய அப்டேட் செய்யப்பட்ட ஆப்பை பதிவிறக்கம் செய்யவும். அதாவது வாட்ஸ்அப் ஆப்பை அப்டேட் செய்யவும். இது ஆப்பிள் iOS பயனர்களுக்கும் கிடைக்கிறது. 

இதற்கிடையில், வாட்ஸ்அப் தகவல்களை ஒளிபரப்புவதற்காக ‘சேனல்கள்’ என்ற புதிய கருவியை உருவாக்கி வருகிறது. சேனல்கள் அம்சத்துடன், பயனர்கள் தாங்கள் செய்திகளைப் பெறத் தேர்ந்தெடுக்கும் நபர்களிடமிருந்து பயனுள்ள செய்திகளை எளிதாகப் பெற முடியும். இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. விரைவில் இந்த அம்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

click me!