பயனர் ஒருவர் சொன்னதற்காகவே ட்விட்டர் தளத்தின் லோகோவில் பறவை படத்திற்குப் பதிலாக நாய் படத்தை வைத்திருப்பது குறித்து தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ ஆகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் அதிரடி மாற்றங்களைச் செய்துவருகிறார். குறிப்பாக ட்விட்டர் மூலம் வருவாயைப் பெருக்கும் நோக்கில், ப்ளூடிக் பெறுவதற்கு கட்டணம் பெறுவது உள்ளிட்ட புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
இந்நிலையில், ட்விட்டர் லோகோ திடீரென மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டர் என்றவுடன் நினைவுக்கு வரும் நீல நிற பறவையின் படம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக ஷிபா இனு என்ற ஜப்பானிய நாய் படம் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ மாற்றம் டெஸ்க்டாப் தளத்தில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மொபைல் ஆப்களில் ட்விட்டரின் வழக்கமான பறவை லோகோதான் இருக்கிறது.
ட்விட்டர் லோகாவாக வைக்கப்பட்டுள்ள நாய் படம் Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் லோகாவாவும் இந்தப் படம் உள்ளது. பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் என்ற மென்பொருள் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட Dogecoin கிரிப்டோகரன்சியை எலான் மஸ்க் நீண்ட காலமாக ஊக்குவித்து வந்துள்ளார்.
WhatsApp Chat Lock: வாட்ஸ்ஆப் பிரைவேட் சாட்களை லாக் செய்யும் வசதி அறிமுகம்
As promised pic.twitter.com/Jc1TnAqxAV
— Elon Musk (@elonmusk)இந்நிலையில், அந்த Doge லோகோவை ட்விட்டர் லோகோவாக வைத்துள்ளார் எலான் மஸ்க். இதற்கான காரணத்தைக் கூறும் வகையில், இந்த ட்விட்டரில் பயனர் ஒருவருடன் நடத்திய உரையாடலைப் பகிர்ந்துள்ளார். "ட்விட்டர் போன்ற மாற்று தளம் தேவையா?" என்று எலான் மஸ்க் கேட்க, அதற்கு பதில் அளித்த பயனர் ஒருவர், "புதிய தளம் வேண்டாம். ட்விட்டரையே வாங்கி விடுங்கள். லோகோவில் பறவைக்குப் பதில் நாய் படத்தை வைத்துவிடுங்கள்" என்று சொல்லி இருக்கிறார்.
இந்த உரையாடலின் ஸ்கீன் ஷாட்டை ட்வீட் செய்துள்ள எலான் மஸ்க், அந்தப் பயனருக்கு வாக்களித்தபடியே ட்விட்டர் லோகோவை மாற்றியதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், ட்விட்டர் லோகா மாற்றத்தின் எதிரொலியாக Dogecoin கிரிப்டோகரன்சியின் மதிப்பு 0.079 டாலரில் இருந்து 0.094 டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இதே நாய் படத்தை ட்வீட் செய்து, ட்விட்டரின் புதிய சிஇஓ இவர்தான் என்று கூறினார். மேலும், இவர் மற்ற நபர்களை விட மிகவும் சிறந்தவர் எனவும் தெரிவித்திருந்தார்.
பூமிக்கு மிக நெருக்கமாக வரும் விண்கல்! ஏப்ரல் 6ஆம் தேதி என்ன நடக்கப் போகுது? நாசா விளக்கம்