ஆளுநரைச் சந்தித்த பிரபல யூடியூபர் இர்ஃபான்... எதற்கு தெரியுமா?

Published : May 03, 2023, 11:03 PM IST
ஆளுநரைச் சந்தித்த பிரபல யூடியூபர் இர்ஃபான்... எதற்கு தெரியுமா?

சுருக்கம்

பிரபல யூ ட்யூபர் இர்ஃபான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். இதுக்குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பிரபல யூ ட்யூபர் இர்ஃபான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். இதுக்குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது யூடியூபில் உணவுகள் குறித்த விமர்சனங்களை செய்து பிரபலமடைந்தார். இந்த நிலையில் இவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளார். 

இதையும் படிங்க: மாடு முட்டி உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

அப்போது வரும் மே.14 ஆம் தேதி, யூடியூபர் இர்ஃபானுக்கு திருமணம் நடைபெறவுள்ளதால், அதற்கான அழைப்பிதழை ஆளுநரிடம் வழங்கினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இர்ஃபான், பல திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் சந்தித்து அவர்களுடன் உரையாடும் வீடியோவை தனது யூடியூபில் பதிவிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விதிமீறல்.. இது நியாயமே கிடையாது - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

மேலும் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு முதலை வேட்டை, துப்பாக்கிச்சூடு, விமானம் ஓட்டுதல் போன்ற பல சாகச வீடியோக்களையும் பதிவிட்டார். இதனால் இவரது வீடியோ மக்களை வெகுவாக கவர்ந்தது. இவரது யூடியூப் சேனலுக்கு 3.53 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அதிகாலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சுத்துபோட்ட போலீஸ்! மொத்த டீமும் கைது.? பின்னணி என்ன?
தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு! ரூ.48,000 உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி?