அரசு மருத்துவமனையில் தீக்குளித்த இளைஞர்; வலிதாங்க முடியாமல் உருண்டு புரண்டதை கண்டு தெறித்து ஓடிய நோயாளிகள்...

 
Published : Feb 02, 2018, 07:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
அரசு மருத்துவமனையில் தீக்குளித்த இளைஞர்; வலிதாங்க முடியாமல் உருண்டு புரண்டதை கண்டு தெறித்து ஓடிய நோயாளிகள்...

சுருக்கம்

Youth set on fire in government hospital Patients who run and flatten up in pain ...

சேலம்

சேலம் அரசு மருத்துவமனையில் தீக்குளித்த இளைஞர் வலிதாங்க முடியாமல் உருண்டு புரண்டதை கண்ட நோயாளிகள் நாலாபுறமும் தெறித்து ஓடினர்.

சேலம் மாவட்டம், பழைய சூரமங்கலம் இரயில்வே நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் செவ்வாய்பேட்டை பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூங்கோதை. இவர்களுக்கு சங்கர், ரமேஷ், மோகன் என்ற மூன்று மகன்களும், மஞ்சு என்ற மகளும் உள்ளனர். இதில் கடைசி மகனான மோகன் எம்.பி.ஏ. முடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

மோகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தற்போது விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த மோகன், டீன் அலுவலகம் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மண்எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி கொண்டு நின்றிருந்தார்.

பின்னர், அவர் திடீரென ‘லைட்டர்’ மூலம் தனது உடலில் தீயை பற்ற வைத்ததால் அவரது உடலில் தீ சடசடவென்று பரவி உடல் முழுக்க எரிய தொடங்கியது. வலி தாங்க முடியாததால் அவர் அலறிகொண்டு டீன் அலுவலகம் உருண்டு புரண்டதைக் கண்ட நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

ஒரு கட்டத்தில் மோகன் அங்கு படுத்து உருண்டார். இதையடுத்து மருத்துவ ஊழியர்கள் உள்பட சிலர் உடனடியாக தீயணைப்பான் கருவிகள் மற்றும் போர்வை உள்ளிட்டவை மூலம் அவருடைய உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

அதனைத் தொடர்ந்து உடல் கருகிய மோகனை தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையர் அன்பு, செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

இதனையடுத்து காவலாளர்கள் அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில் அவர், "எனக்கு 2 அண்ணனும், ஒரு அக்காளும் உள்ளனர்.  பரம்பரை சொத்து பிரச்சனை காரணமாக நான் தீக்குளித்தேன். மேலும் மருத்துவமனையில் தீக்குளித்தால் உடனே என்னை காப்பாற்றி விடுவார்கள்" என்றும் கூறியனாராம்.

இதனிடையே மோகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை மருத்துவர் டீன் கனகராஜ் பார்வையிட்டார். இதுகுறித்து அவர், ‘தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்யும் மோகன் சொத்து பிரச்சனை காரணமாக தீக்குளித்ததாக கூறி உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்‘ என்று கூறினார்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் மோகனிடம் சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சண்முக பிரியா வாக்குமூலம் பெற்றார்.

சொத்து பிரச்சனையால் சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவன மேலாளர் தீக்குளித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதுதொடர்பாக மருத்துவமனை காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் 88 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..? இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!
ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!