
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் தன் மீது சந்தேகப்பட்ட கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயன்ற மனைவியை காவளார்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கிளாமரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (48). இவர் நெசவு விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர் கிளாமரத்தில் தேநீர் கடை நடத்தி வருகிறார்.
தேநீர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், முனீஸ்வரியிடம் கடைக்காரர் என்ற முறையில் பேசுவது வழக்கம். இதனை பார்க்கும் பெருமாளுக்கு, கடுப்பாகி உள்ளார். ஒருநாள், கடைக்கு வரும் ஆள்களோடு பேசிக்கொண்டிருந்த மனைவி முனீஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று, கடைக்கு வந்த சிலருடன் முனீஸ்வரி பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பெருமாள், மீண்டும் இதுகுறித்து கேட்டு சண்டைப் போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மனைவி முனீஸ்வரி, தேநீர் கடையில் பயன்படுத்தும் கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து பெருமாள் மீது ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனையடுத்து கமுதி காவல் நிலையத்தில் இதுகுறித்து பெருமாள் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த காவலாளர்கள் முனீஸ்வரியை கைது செய்தனர். அவரிடம் விசாரணையும் நடைப்பெற்று வருகிறது.