ஐ.டி.ஐ. மாணவர் நள்ளிரவில் ஓட, ஓட வெட்டிக் கொலை... சென்னையில் நடந்த பயங்கரம்...

 
Published : Jan 21, 2018, 08:36 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ஐ.டி.ஐ. மாணவர் நள்ளிரவில் ஓட, ஓட வெட்டிக் கொலை... சென்னையில் நடந்த பயங்கரம்...

சுருக்கம்

young man was murdered by love affair in Chennai

சென்னையில் காதல் பிரச்சினையால் ஐ.டி.ஐ. மாணவர் நள்ளிரவு ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் இருந்து வள்ளுவர்கோட்டம் செல்லும் குளக்கரை சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக நுங்கம்பாக்கம் போலீசில் புகார் வந்ததை அடுத்து
நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குளக்கரை சாலை 2-வது தெருவில் இருந்து சம்பவம் நடைபெற்ற பகுதி வரை ரத்தம் சிதறி இருந்தது. எனவே அந்த வாலிபரை ஓட, ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. பின் அந்த வாலிபரின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட நபரின் சட்டையில் இருந்த அடையாள அட்டை மூலம் கொலை செய்யப்பட்டது சென்னை நுங்கம்பாக்கம் அப்பு தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ரஞ்சித் 19 வயதுடைய இளைஞர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐயில் படித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது  நண்பரின் சகோதரி குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவுக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு ரஞ்சித். இரவு 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தநிலையில் ரஞ்சித் கொலை செய்யப்பட்ட தகவலை கேட்டு அவர்களுடைய பெற்றோர் அதிர்ச்சி உள்ளனர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த இளைஞர் கொலைக்கான காரணம் என்ன என  விசாரணையில் இறங்கினர். ரமேஷ் உடல் கிடந்த பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். மேலும், ரஞ்சித் பயன்படுத்திய செல்போனையும் கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். ரஞ்சித்தின் செல்போனில் ஆடியோ உரையாடல் பதிவு செய்யும் வசதி இருந்துள்ளது.

எனவே சம்பவத்தன்று அவருக்கு வந்த செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ரஞ்சித் கொலை செய்யப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக வந்த ஒரு போன் காலில், ‘அந்த பெண்ணை விட்டுவிடு, ‘நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். நீ விடவில்லை என்றால் உன் கழுத்தை அறுத்துக் கொன்று விடுவேன்’ என்று ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பேரில் செல்போனில் பேசிய நபரை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக கொலையாளியை பிடிக்க 2 தனிப்படை  அமைத்து  நடவடிக்கைகளில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!