
ஷாக்கிங் நியூஸ்: சென்னை to திருச்சி, ராமேஸ்வரம், தஞ்சாவூர், கோவை, சேலம் பஸ் டிக்கெட் எவ்வளவு தெரியுமா....?
அரசுப் பேருந்து கட்டண உயர்வையடுத்து அதிகரிக்கப்பட்ட விகிதப்படி இனி, சென்னையிலிருந்து திருச்சி,தஞ்சாவூர்,கோவை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல எவ்வளவு டிக்கெட் விலை என்பதி பார்க்கலாம்.
சென்னை - திருச்சி அரசு விரைவுப் பேருந்தில் ரூ.365 கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கு முன் ரூ.235-ஆக இருந்தது.
சென்னை - ராமேஸ்வரத்திற்கு ரூ.633 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.410-ஆக இருந்த கட்டணம் ரூ.233 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை - தஞ்சாவூர் விரைவுப்பேருந்து கட்டணம் இனி ரூ.386 ஆகும். தற்போது இது ரூ.250 ஆக உள்ளது.
சென்னை - சேலம் இனு ரூ.380. இதற்கு முன் ரூ.240.
ஆக மொத்தத்தில்,கட்டண உயர்வு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.திடீரென உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு காரணமாக,பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.