
பேருந்து கட்டணம் கிடுகிடு உயர்வு
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.திடீரென உயர்த்தப்பட்ட கட்டண உயர்வால்,பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சாதாரண பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் - ₨5ல் இருந்து ₨6 ஆக உயர்வு
விரைவு பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் - ₨17ல் இருந்து ₨24 ஆக உயர்வு
குளிர்சாதன பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் - ₨27ல் இருந்து ₨42 ஆக உயர்வு
அதி சொகுசு, இடைநில்லாப் பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம்- ₨21ல் இருந்து ₨33ஆக உயர்வு
மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் - ₨3ல் இருந்து ₨5ஆக உயர்வு
மாநகர, நகர பேருந்து கட்டணம் அதிகபட்சம்- ₨14ல் இருந்து ₨23ஆக உயர்வு
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துக் கட்டணம் குறைந்தபட்சம்- ₨3லிருந்து ₨5ஆக உயர்வு
சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துக் கட்டணம் அதிகபட்சம் - ₨14லிருந்து ₨23ஆக உயர்வு
பேருந்து டிக்கெட் கட்டண உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
மலைப்பகுதிகளில் சாதாரண, விரைவு பேருந்துகளுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 20% உயர்வு
தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்
மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் அரசு தெரிவித்துள்ளது.