
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் நிறுத்தத்தில் இறங்குவதற்குள் தனியார் பேருந்தை எடுத்ததால் கீழே விழுந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதானமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் அந்த பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து நேற்று கிருஷ்ணகிரி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில், திம்மராஜ் மனைவி கவிதா (28) என்பவர் பயணித்தார்.
கவிதா, அட்டகுறுக்கி பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயற்சித்தார். அப்போது பேருந்து உடனே எடுக்கப்பட்டதால் நிலைதடுமாறி கீழே விழுந்த கவிதா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, அங்கு திரண்ட மக்கள் மற்றும் பயணிகள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விவாதத்தில் ஈடுபட்டு பேருந்தின் முன்புறக் கண்ணாடியை உடைத்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சூளகிரி காவலாளர்காள் கவிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சூளகிரி காவலாளர்காள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.