தந்தை ஸ்மார்ட் ஃபோன் வாங்கித்தர மறுத்ததால், தற்கொலை செய்து கொண்ட மகள்; தர்மபுரியில் நடந்த விபரீத சம்பவம்

First Published Jun 4, 2018, 12:49 PM IST
Highlights
young girl suicide for not receiving a smart phone from her father


செல்ஃபோன் என்பது இன்று எல்லோரிடமும் இருக்கும், ஒரு அத்தியாவசிய பொருளாக சமுதாயத்தில்  காணப்படுகிறது. அதிலும் பெரும்பாலான பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஸ்மார்ட் ஃபோன் காணப்படுகிறது.  டெக்னாலாஜியில் பிறரை விட தாங்கள் பின் தங்கி விட கூடாது எனும் முனைப்பில், ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பது பழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது. இது போன்ற ஸ்மார்ட் ஃபோன்களால் பல நன்மைகள் இருந்தாலும், அதே அளவிற்கு தீமைகளும் இருக்கின்றன.

இந்த ஸ்மாட்ர் ஃபோனால் பலரின் உயிர் பறி போகி இருக்கிறது. ஆனால் ஸ்மார் ஃபோன் வாங்கித் தராததால் தர்மபுரியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அய்யாத்துரை என்பவர்  தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையில் வசித்து வருகிறார். அவரது மகள் அகிலா. கல்லூரியில் படித்து வரும் இவர்  தன்னுடன் படிக்கும் பிற மாணவிகள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதை பார்த்துவிட்டு,  தனக்கும் ஸ்மார்ட்போன் வேண்டும் என அவரது தந்தையிடம் கேட்டிருக்கிறார்.

அய்யாத்துரையிடம் அவ்வளவு பணம் இல்லாத காரணத்தால், அவர்  பிறகு ஸ்மார்ட் ஃபோன் வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் உடனே ஸ்மார்ட் ஃபோன் வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார் அகிலா.

இதனால் அகிலாவின் தந்தை அவரிடம் “ஸ்மார்ட் ஃபோன்  வாங்கி தந்தால் தான் நீ படிக்க போவாய் என்றால் நீ அங்கு போக வேண்டாம். வீட்டிலேயே இரு என கோபமாக கூறியிருக்கிறார். நினைத்தது நடக்கவில்லையே என்ற வருத்தத்தில், அகிலா தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார்..

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அகிலாவின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும் அகிலாவின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? எனவும் விசாரித்து வருகின்றனர். இன்றைய தலைமுறையினரின் இது போன்ற அவசர முடிவுகள், அப்பகுதி மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

click me!