
என் மகளை தாக்கிய மாமியார் மீதும் அதை வீடியோ எடுத்த பெண் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசியாவில் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் 6 வயது சிறுமியை ஒரு பெண் கொடூரமாகத் தாக்கிய காட்சி சமூக தளத்தில் வைரலாக பரவியது.
இதில் ஒரு சிறுமியை சாப்பாடு சரியாக சாப்பிட விலை என பல முறை கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த பெண்ணை அடிக்கும்போது வீடியோ எடுக்கும் பெண் சிறுமியை அடிக்காதே என்றும் இல்லையென்றால் வீடியோ பிடித்து வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
ஆனால் அடித்த பெண் நான் அடிக்கவில்லை கண்டிக்கிறேன் என கூலாக பதிலளிக்கிறார். இதையடுத்து இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கபட்ட சிறுமியின் தந்தை விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
அந்த சிறுமி என் மகள் தான், அவளை பார்த்துக்கொள்ள எனது மாமியாரிடம் விட்டிருந்தேன், எனக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். அவள் தான் கடைசி மகள்.
எனக்கு வாட்சப்பில் என் மனைவி இந்த வீடியோ அனுபிவைத்தார். நான் அந்த வீடியோவை பார்த்தேன். அதில் என் மாமியார் என் மகளை அடித்துகொண்டிருந்தார்.இதை பார்த்ததும் எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது. ஏன் அடிச்சாங்க எதுக்கு அடிச்சாங்க என்னென்னு எனக்கு எதுவும் தெரியாது.
அந்த வீடியோ பார்த்துவிட்டு நான் வீட்டிற்கு போவதற்குள் நிறைய பேர் அதை பார்த்து இருக்காங்க. அந்த அளவுக்கு வேகமா இந்த வீடியோ வைரல் ஆகிடுச்சு.
நான் என் மாமியார கூப்பிட்டு கேட்டபோது ‘அவ சாப்பிடவில்லை என்று அடித்தேன், அதுவும் முன்ன அடிச்சது என தெரிவித்தார். என்னதான் இருந்தாலும் அடிச்சது தப்புதான். ஆனால் அடிக்கும் போது படம் எடுத்தது என் மாமியாரோட கூட்டாளிதான்.
சமீபத்தில் அவங்களுக்கும் என் மாமியாருக்கும் மோதல் ஏற்பட்டது. அதனால்தான் அவர் இதை வைரலாக்கி விட்டிருக்கிறார்.அடிப்பதை பார்த்து வீடியோ எடுத்த அந்த பெண்ணையும் போலீசார் கைது செய்ய வேண்டும்.
நான் வளர்க்கும் நாய் கூட சென்று தடுக்கிறது ஆனால் வீடியோ எடுத்தவர் தடுக்கவில்லை.இந்த வீடியோவை பார்த்துவிட்டு பொதுமக்கள் சிலர் என் வீட்டின் மீது கல் எரிகின்றனர்.
என் குழந்தை மீது பரிதாபபட்டுதான் இதுபோன்று செய்கிறார்கள். தவறில்லை. ஆனால் இதில் நானும் தான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே யாரும் கல் எரிய வேண்டாம்.
என் மகளை அடித்த மாமியார் மீதும் அதை படம் எடுத்து வெளியிட்ட நபர் மீது புகார் கொடுத்துள்ளேன்.மகளை மருத்துவ பரிசோதனைக்கு அன்னுபியிருக்கிறேன். மருத்துவ ரிப்போர்ட் வந்ததும் இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்ற உண்மை தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.