
கிருஷ்ணகிரி
மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ரூ.103 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மண்டல இணைப் பதிவாளர் பாண்டியன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நடப்பு 2018 - 2019-ஆம் ஆண்டிற்கு பயிர்க் கடன் வழங்க ரூ.103 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உள்பட்ட செயல் எல்லையைச் சேர்ந்த விவசாய உறுப்பினர்கள், உரிய ஆவணங்கள் அளித்து, சங்கம் மூலம் பயிர்கடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி, தோட்டக்கலைத் துறை சார்பில் பாரத பிரதமரின் நுண்ணுயிர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் 75 சதவீத மானியத்தில் தக்காளி, 35 சதவீத மானியத்தில் ரோஜா சாகுபடி போன்றவையும் பயிரிடப்பட்டுள்ளன.
ரூ. 15 ஆயிரம் மதிப்பில் இயற்கை உரம் தயாரிப்பு பணிகளும் நடைப்பெற்று வருகின்றன.