எகிறும் மதுபான விற்பனை..நேற்று ஒரே நாளில் மட்டும் இவ்வளவு கோடியா..? முதலிடத்தில் சென்னை..

By Thanalakshmi VFirst Published Jan 1, 2022, 5:21 PM IST
Highlights

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. 
 

தமிழகத்தில் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 120 பேர் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 74 பேருக்கு ஒமைக்ரா தொற்று உறுதியானது. இது போல் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை அரசு அறிவித்தது.அதன்படி டிசம்பர் 31 தேதி இரவு கடற்கரைகளில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கபட்டது. அதேபோல் சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை,வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. கோவில்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் கட்டாயம் அணிந்திருப்பது போன்றவை கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கில் பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிக பட்சம் 100 பேர் மட்டுமே அனுமதி, உணவகங்கள், விடுதிகள் , அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புத்தககண்காட்சி மற்றும் பொருட்கண்காட்சி ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு மதுபான விற்பனை நடந்த விலையில் இந்த ஆண்டு ரூ.147.69 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. தொடர்மழை, சபரிமலை சீசன், ஓமைக்ரான் கொரோனா கட்டுப்பாடுகள், புத்தாண்டு கொண்டாட்ட தடை ஆகிய காரணங்களால் மதுவிற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.41.45 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.27 கோடியும், கோவை மற்றும் திருச்சி மண்டலத்தில் ரூ.26 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.25 கோடியும் மதுபானம் விற்பனையாகியுள்ளது.

click me!