பயணிடம் பணத்தைத் திருடிய கில்லாடிப் பெண்கள்; விரட்டிப் பிடித்த பொதுமக்கள் என்ன பண்ணாங்கனு பாருங்க!

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 24, 2018, 12:34 PM IST

திருநெல்வேலியில் பேருந்தில் இறங்கி சென்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பணப் பையைத் திருடிக் கொண்டு பெண்கள் இருவர் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.


திருநெல்வேலி

திருநெல்வேலியில் பேருந்தில் இறங்கி சென்றுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பணப் பையைத் திருடிக் கொண்டு பெண்கள் இருவர் தப்ப முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதிலிருந்து பெண் பயணி ஒருவர் இறங்கி நடந்துச் சென்றார். அப்பெண் பயணியை இரண்டு பெண்கள் பின்தொடர்ந்தனர். அப்போது அவர் கையில் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு ஓடினர். 

இதனால் அந்தப் பெண் பயணி திருடன் திருடன் என்று அலறி சத்தம் போட்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பணத்தை திருடிக் கொண்டு ஓடிய அப்பெண்கள் இருவரையும் துரத்திப் பிடித்தனர். 

பின்னர், அந்த பெண்களை பிடித்துவைத்துக் கொண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு அதை உரியவரிடம் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவலாளர்கள் அப்பெண்களை கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில்அவர்கள் இருவரும் திருநெல்வேலி, பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

click me!