காக்கிச்சட்டைகளை கலங்க வைக்கும் அடுத்தடுத்த பரிதாபங்கள்.. இளம்பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை!

Published : Feb 04, 2019, 11:26 AM ISTUpdated : Feb 04, 2019, 11:43 AM IST
காக்கிச்சட்டைகளை கலங்க வைக்கும் அடுத்தடுத்த பரிதாபங்கள்..  இளம்பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை!

சுருக்கம்

திருச்சியில் பெண் காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் பெண் காவலர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் அடுத்துள்ள தவளைக்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரின் மகள் செந்தமிழ்செல்வி. இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றுகிறார். கடந்த 2017-ல் பணிக்குச் சேர்ந்த செந்தமிழ்செல்விக்கு கடந்த வருடம் சிறை வார்டனாக பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து திருச்சி கே.கே.நகரில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார்.

 

சிறைக்கு ஷிப்டு முறை பணி என்பதால் நேற்று இரவு அவர் பணிக்கு வரவில்லை. இதனையடுத்து அவர் செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் பணிக்குச் செல்லாததை அறிந்த சக காவலர்கள், செந்தமிழ் செல்வி தங்கி இருந்த சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்புக்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பல முறை கதவை தட்டிய போதும் திறக்காததால் சந்தேகமடைந்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் செந்தமிழ் செல்வி சடலமாக மீட்கப்பட்டார். 

இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே தமிழக காவல் துறையில் போலீஸார் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொ*லை.! வெளியான அதிர்ச்சி காரணம்!
திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்