பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை... முக்கிய ஆவணங்கள் சிக்கின..!

திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடையில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 


திருச்சி சாரதாஸ் ஜவுளிக் கடையில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாரதாஸ் ஜவுளிக்கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சாரதாஸ் ஜவுளிக்கடை திருச்ஙசி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. 

Latest Videos

நாள்தோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெற்று வரும் நிலையில், இங்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்று காலை சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் காரணமாக கடை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். வாடிக்கையாளர்களும் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத ரொக்கம், மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை நாளையும் தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இதேபோல சரவணபவன், அஞ்சப்பர் உள்ளிட்ட ஓட்டல்களில் கூரமான வரித்துறை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

click me!