ரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு சரமாரி கத்திகுத்து; தொழிலாளி கைது...

 
Published : Jun 01, 2018, 07:03 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
ரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு சரமாரி கத்திகுத்து; தொழிலாளி கைது...

சுருக்கம்

Woman walking on the road volley knife attack Worker arrested ...

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ரோட்டில் நடந்து சென்ற இளைஞரை சரமாரியாக கத்தியால் குத்திய தொழிலாளியை காவலாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நெருப்புக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் விஜயகுமார் (30). 

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சக்கரவர்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை விஜயகுமார் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்கரவர்த்திதான் வைத்திருந்த கத்தியால் விஜயகுமாரை சரமாரியாக குத்தினார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விஜயகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இதுகுறித்து ராஜகோபால் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் விசாரணை நடத்தி சக்கரவர்த்தியை கைது செய்தார். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து கைதான சக்கரவர்த்தியை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து காவலாளர்கள் சேலம் சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி