”பத்திரிக்கை அன்பர்களின் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” ரஜினிகாந்த்

First Published May 31, 2018, 8:05 PM IST
Highlights
super star apologise for his behaviour


நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை தூத்துக்குடியில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் வைத்து நடைபெற்ற, பத்திரிக்கையாளர்கள் உடனான சந்திப்பின் போது, ரஜினி கூறிய பதில்கள் இப்போது கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அப்போது அவர் ”சமூக விரோதிகள் தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்றதுடன். போராட்டம் போராட்டம் என்று போனால் நாடே சுடுகாடாகிவிடும் என்று கூறினார்” அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் அப்போ போராட்டமே கூடாது என்கிறீர்களா? என தொடர்ந்து கேள்வி கேட்க, அந்த கேள்வியால் எரிச்சல் அடைந்த ரஜினிகாந்த் “யே யாருய்யா?” என ஒருமையில் கோபாமாக கேட்டார்.

அவர் இவ்வாறு பேசியதை சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கண்டித்திருக்கிறது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் இப்போது டிவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.

 

விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.

— Rajinikanth (@rajinikanth)

“விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்.” என தெரிவித்திருக்கிறார் ரஜினி

click me!