
ஒரு தலைக் காதலால், ஆகாஷ் என்பவர் இந்துஷா என்ற பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்தார். இந்துஜாவைக் காப்பாற்றப்போய் சிகிச்சை பெற்று வந்த அவரின் தாய், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து, ஆகாஷ் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஸ், இவர் இந்துஜா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்துஜா திருமணம் செய்ய மறுத்ததை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் 14 ஆம்தேதி இந்துஜாவின் வீட்டுக்கு சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் இந்துஜா, சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார். அவரைக் காப்பாற்ற சென்ற அவரின் தாய் ரேணுகா மற்றும் தங்கை நிவேதா ஆகியோர் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்துஜாவின் தாய் ரேணுகா, சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்துஜா மற்றும் அவரின் தாயார் உயிரிழந்ததை அடுத்து, ஆகாஷ் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.