
இலங்கைக்கு அருகே உருவாகி இருக்கும் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதிய கன்னியாகுமரி கடற்கரைப்பகுதிக்குள் நகர்வதால், அந்த ஈரப்பதம் காரணமாகசென்னையில் இன்று இரவு முதல் மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது-
இலங்கைக்கு அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களில் தீவிரமடைந்து புயலாக மாறி(வாய்ப்புண்டு), கன்னியாகுமரி லட்சத்தீவு கடற்பகுதிக்கு செல்லும்.
இலங்கைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கன்னியாகுமரி அருகே கடற்கரைப்பகுதிக்கு நகர்ந்துவிட்டது. இதனால், (29ந்தேதி)இன்று மாலை முதல், நாளைவரை 30ந்தேதிவரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
இதன் காரணாக, சென்னையில் இன்று இரவு அல்லது நாளை காலையில் இருந்து டிசம்பர் 1-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. கனமழை இருக்க வாய்ப்பில்லை. இன்று இரவு மழை இல்லாவிட்டாலும், நாளை காலையில் இருந்துமழை இருக்கும்.
2010ம்ஆண்டு டிசம்பர் போல
2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் கன்னியாகுமரி பகுதியில் குறைந்தகாற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்ந்தபோது, இந்தப்பகுதிகளில் மிக, கனமழை பெய்தது. 2014ம் ஆண்டு மே மாதத்திலும், கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து, லட்சத்தீவு கடற்பகுதிக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரும்போது இதேபோன்ற மழை இருந்தது. கன்னியாகுமரி எனது சொந்த மாவட்டம் என்பதால், இந்த இரு சம்பவங்களையும் என்னால் மறக்க முடியாது.
2009ம் ஆண்டு உருவான பியான் புயல். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை கன்னியாகுமரி கடலுக்கு நகர்ந்து, அரேபியகடல் பகுதியில் செல்லும் போது புயலாக மாறியது. அப்போது 820 மி.மீ மழை பெய்ததும், நீலகிரி மாவட்டம் குன்னூர் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதையும் யாரும் மறக்கமுடியாது. இப்போதுவரை ஒரே நாளில் 820மி.மீ மழை பெய்ததுதான் சாதனையாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை 2010ம்ஆண்டு டிசம்பர் போல தென் மாவட்டங்களில் இன்று முதல்பெய்யும் மழை இருக்கும்.
அடுத்த புயல்
மலேசிய கடலில் இருந்து உருவாகி அந்தமான் வழியாக வருகிறது. இது புயலாக மாற அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அதன் அழுத்தம் குறைவாக இருப்பதால், புயலாகவேகமாக மாறும். இது குறித்த சிறப்பு பதிவை நான் பின்னர் பதிவிடுகிறேன். அடுத்த வாரத்தில் மழை தொடர்பாக நான் பிஸியாகிவிடுவேன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.