மணல் மாஃபியாக்களுக்கு ஆப்பு! குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் மலேசிய மணல்!

First Published Nov 29, 2017, 11:43 AM IST
Highlights
Malaysian sand at low price!


தமிழக மக்களுக்கு குறைந்த விலையில் மலேசிய மணல் கிடைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை வகை செய்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு தமிழகத்தல் உள்ள மணல் குவாரிகளை திறக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மலேசியால் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல், வரி உள்ளிட்டவைகளுக்கு கட்டுப்பட்டு விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்கு முழுவதுமாக மூட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் புதிதாக மணல் குவாரிகளையும் திறக்கக் கூடாது என்றும், தமிழகத்தின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அது மட்டுமல்லாது சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். வெளிநாடீகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலமே, தமிழகத்தன் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார். மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது தமிழகத்தில் விற்கப்படும் மணல் விலையைவிட மிகக் குறைவான விலைக்கே மலேசிய மணல் விற்பனை செய்ய உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருட்நதது. மணல் விலை குறைவாக விற்கப்படும் நிலையில் இது மணல் மாஃபியாக்களுக்கு பெரும் இடைஞ்சலைத் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இன்று முதல் 6 மாதத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட உத்தரவிட்டதை அடுத்து, குறைந்த விலையில் தமிழக மக்களுக்கு மலேசிய மணல் கிடைக்கவும் உயர்நீதிமன்றம் வகை செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நிலத்தடி நீர் பாதுகாக்க்வும் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மணல் மாஃபியாக்களுக்கு பேரிடியாக இறங்கி உள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், வரும் 6 மாதங்களுக்கு மணல் எடுக்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

click me!