
திருச்சி அருகே திருமணம் ஆகாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.
திருச்சி குழுமணி அடுத்துள்ள பேருர் கிராம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு மாலதி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு மாலா வீட்டில் உணவு அருந்தி விட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். சில மணித்துளிகளில் திடீரென மாலா மாயமானார்.
இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இன்று காலை பேரூர் ஊராட்சி மன்ற அலுவலக பின்புறம் மர்மமான முறையில் மாலா இறந்துகிடந்தார். அவரின் இடுப்பு, கை, கால் உள்ளிடட இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இருந்தது.
தகவலறிந்த போலீசார் மாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.