கோயம்பேட்டில் பி.எச்.டி மாணவிக்கு நேர்ந்தது என்ன ? ... போலீசாரின் ஆணவப்போக்கு

First Published Jan 9, 2017, 6:00 PM IST
Highlights


கோயம்பேட்டில் அமைச்சர் முன்னிலையில் கொதித்து போய் மாணவி ஒருவர் போலீசாரின் அராஜகம் பற்றி கூறியது பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இன்று அதிகாலை பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பியுள்ளார் பெங்களுரு ஐசாக் பல்கலை கழக பிஎச்டி மாணவி அன்னபூர்ணா. தொடர்ந்து பேருந்தில் வந்ததால் கடுமையான தலைவலியும், வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. 
தொடர்ந்து வாந்தி எடுத்து வந்ததால் அதிக அளவு தலைவலியும் , உடற்சோர்வும் ஏற்பட அவர் பேருந்தை விட்டு இறங்கியவுடன் கோயம்பேட்டில் பயணிகள் உறங்கும் இடம் அருகே மயங்கிய நிலையில் அமர்ந்திருந்துள்ளார். 


அப்போது அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் குப்புசாமி , ஆயுதப்படை காவலர் பாண்டியன் இருவரும் படுத்து கிடந்த அன்னபூர்ணவிடம் வந்து குச்சியால் குத்தி அடித்து எழுப்பியுள்ளனர். இங்க என்ன செய்கிறாய் என்று கேட்டுள்ளனர். உடன் இரண்டு பெண் போலீசார் இருந்துள்ளனர். 
அப்போது அன்னபூர்ணா சார் பெங்களூருவிலிருந்து பஸ்ஸில் வந்தேன் தொடர்வாந்தி காரணமாக மயக்கத்தினால் படுத்திருக்கிறேன். ஒரு பத்து நிமிடம் கிளம்பி விடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் எந்திரிடி வெளியே போடி என்று ஏக வசனத்தில் பேசியுள்ளனர். அதற்கு அன்னபூரணி சார் நான் ஆராய்ச்சி மாணவி ஒரு பெண்ணிடம் இப்படித்தான் பேசுவீர்களா என்று கேட்ட போது தடியாலும் கைகலாலும் தாக்க வந்துள்ளனர். 


இதனால் அவமான மடைந்த அன்னபூர்ணா இத்தனை பேர் இருக்கும் போது என்னை மட்டும் ஏன் சார் கேட்கிறீர்கள் என்றவுடன் சந்தேகம் உள்ளது கேட்கிறோம், ரொம்ப பேசுனா பிராத்தல் கேசில் போட்டு விடுவேன் என்று கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த அன்னபூர்ணா நானே ஸ்டேஷனுக்கு வந்து உங்கள் மீது புகார் அளிக்கிறேன் என்று சிஎம்பிடி ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.
அங்கு போலீஸ் மீதே புகார் கொடுக்கிறாயா என்று நையாண்டி செய்து திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் பிரஸ்மீட்டை பார்த்தவுடன் வெகுண்டெழுந்த அன்னபூர்ணா தனக்கு நியாயம் கேட்டு கதறியுள்ளார். அப்போதும் அவரை பிடித்து இழுத்து பத்திரிக்கையளர்கள் முன்பே தங்கள் பலத்தை போலீசார் காட்ட முயன்றனர். 
சாதாரண பெண்ணான தனக்கு இதுதான் நீதியா , நியாயமா என அவர்  கதறியதை பார்த்த அங்குள்ள பயணிகள் பெண்கள் கொதித்து போயினர். நல்லா கேட்டுச்சு அந்த பெண்ணு இங்க தினம் தினம் இப்படித்தான் போலீசார் பயணிகளை அவமானப்படுத்துகின்றனர் என்று கூறினர். 

click me!