"520 கோடி ரூபாய் முறைகேடு செய்தார் ராம்மோகன் ராவ்" - சிபிஐயிடம் ஆதாரங்கள் ஒப்படைப்பு

First Published Jan 9, 2017, 4:01 PM IST
Highlights


ராம் மோகன் ராவ் 520கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்திருப்பதற்கான ஆதாரங்களை சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளனர் அறப்போர் இயக்கத்தினர்.

தமிழக தலைமை செயலாளராக இருந்தவர் ராம் மோகன் ராவ்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செக்ரட்டரி-2 ஆக பணியாற்றியவர்.

ஒட்டுமொத்த தமிழக அரசையே கையில் வைத்திருந்த ராம் மோகன் ராவுக்கு மணல் வியாபாரி சேகர் ரெட்டி ரூபத்தில் தலைவலி வந்தது.  

கருப்பு பண ஒழிப்பின் காரணமாக ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போனதையடுத்து பழைய நோட்டுக்கள் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்கள் மாற்றுவதில் பெரியளவில் முறைகேடு செய்ததாக ராம் மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ, அமலாக்கதுறை வருமானவரித்துறை ஆகிய 3 மத்திய அரசு துறைகளில் இருந்தும் மும்முனை தாக்குதல் நடத்தினர்.

ராம் மோகன் ராவின் மகன் விவேக் நடத்தி வந்த Virtue technologies  மற்றும் அவர் தொடர்புடைய Housekeeping கம்பெனிகளில்தான் அதிக முறைகேடு நடந்திருப்பதாக வருமானவரிதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது ராம் மோகன் ராவின் மகன் விவேக்கின் பினாமி நிறுவனமான Padmavathi facilities என்னும் நிறுவனம் மூலமாகதான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனகளுக்கு வேலையாட்கள் சப்ளை செய்வது பொருட்கள் சப்ளை செய்வது இதன் பிரதான வேலையாகும்.

இந்த நிறுவனத்தின் பெயரை வைத்துகொண்டு அரசு நிறுவனங்களுக்கு தினக்கூலி ஆட்கள் மருத்துவ உபகரணங்கள் லேப்டாப்கள் சப்ளை செய்வது என்ற ரீதியில் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும், அந்த கூடுதல் ஆதாரங்களை சிபிஐயிடம் நேரில் ஒப்படைக்கபோவதகவும் தெரிவித்து அறப்போர் இயக்கத்தினர்,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு நேரில் வந்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்,

ராம் மோகன் ராவ் மற்றும் அவரது விவேக் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அதில் சுமார் 520 கோடி ரூபாய் வரி முறைகேடு நடந்துள்ளதாகவும்,

அதில் Padmavathi facilities மூலமாக அரசை ஏமாற்றியிருப்பதாகவும் இந்த ஊழலுக்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை சிபியி அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரணை நேர்மையாக நடைபெற்றால் தற்போது பதவியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்கள் சிலர் வசமாக சிக்கி கொள்வார்கள் என்று ஜெயராமன் கூறினார்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற இந்த ஊழல் காரணமாகத்தான் அடிமட்ட அளவில் இருக்கும் ஊழியர்கள் கூட ஏழை நோயாளிகளிடம் லஞ்சம் பெறுவதாக காட்டமாக தெரிவித்தார்.

click me!