தீக்குளித்து பெண் இறப்பு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்; மருத்துவமனையில் பரபரப்பு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 29, 2018, 8:56 AM IST
Highlights

கன்னியாகுமரியில் குடும்ப தகராறில் தீக்குளித்து இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவரின் கணவர் சொத்தை அவர்களது குழந்தை பெயரில் எழுதி வைத்தால் உடலை அடக்கம் செய்வோம் என்று கூறியதால் மருத்துவமனை வளாகமே பரபரப்பு அடைந்தது.
 

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் குடும்ப தகராறில் தீக்குளித்து இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவரின் கணவர் சொத்தை அவர்களது குழந்தை பெயரில் எழுதி வைத்தால் உடலை அடக்கம் செய்வோம் என்று கூறியதால் மருத்துவமனை வளாகமே பரபரப்பு அடைந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம், நாகம்பாறைவிளை என்னும் பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவரது மனைவி அனிதா. காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 

கணவன் – மனைவி இடையே குடும்ப தகராறில் இருந்துவந்த நிலையில் அனிதா தீ குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அனிதாவின் உடலை கைப்பற்றிய மார்த்தாண்டம் காவலாளர்க்கள் உடற்கூராய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அனிதாவின் உடல் நேற்று உடற்கூராய்வு செய்யப்பட்டதால் அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடினர். அவர்கள் அனிதாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். அதில், "விபினி பெயரில் இருக்கும் சொத்தை அவர்களது குழந்தையின் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும். அப்போதான அனிதாவின் உடலைப் பெற்றுக் கொள்வோம்" என்று வலியுறுத்தினர். 

உடலை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அனிதாவின் உறவினர்கள் வைத்த கோரிக்கைக்கு விபினும், அவரது உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதனை நம்பி அனிதாவின் உடலை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினர் அவர்களது உறவினர்கள்.

ஊருக்குச் சென்றபிறகு உடலை அடக்கம் செய்துவிட்டால் விபின் சொத்தை தராமல் ஏமாற்ற வாய்ப்புள்ளது என்று கருதி உடனே, "சொத்தை குழந்தையின் பெயருக்கு எழுதி வைத்தால் தான் உடலை அடக்கம் செய்வோம்" என்று உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து விபின் மற்றும் அவரது உறவினர்கள் வெட்டுமணியில் உள்ள சார் பதிவாளர் அலுவலத்திற்கு உடனடியாகச் சென்று குழந்தையின் பெயரில் சொத்தை எழுதிவைத்தனர். அதன்பிறகே அனிதாவின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர் உறவினர்கள். அனிதாவின் உடல் நல்லபடியாக அடக்கமும் செய்யப்பட்டது. 

அனிதாவின் இறப்பு குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!