இலவச பேருந்து திட்டத்திற்கு வித்தியாசமாக நன்றி சொன்ன பெண் ஓவியர்... பஸ் டிக்கெட்டில் முதல்வர் ஓவியம்!!

Published : Sep 07, 2022, 07:27 PM IST
இலவச பேருந்து திட்டத்திற்கு வித்தியாசமாக நன்றி சொன்ன பெண் ஓவியர்... பஸ் டிக்கெட்டில் முதல்வர் ஓவியம்!!

சுருக்கம்

மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பயணச் சீட்டுக்களை கொண்டு முதல்வரின் ஓவியத்தை வரைந்து பெண் ஓவியர் ஒருவர் அசத்தியுள்ளார். 

மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பயணச் சீட்டுக்களை கொண்டு முதல்வரின் ஓவியத்தை வரைந்து பெண் ஓவியர் ஒருவர் அசத்தியுள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் பல எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு அளித்துள்ளார். அதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. இந்த திட்டத்தால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததோடு பலரது சுமையையும் குறைத்துள்ளது.

இதையும் படிங்க: தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து.. பிளஸ் 2 மாணவன் துடிதுடித்து பலி.. திண்டுக்கல் அருகே பயங்கரம்..

இந்த திட்டத்தை பலரும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் பெண் ஓவியர் ஒருவர் தனது தொடக்க காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இலவச பேருந்து பயண திட்டம் தனக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக கூறி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது நன்றியை வித்தியாசமான முறையில் முதலமைச்சருக்கு கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடம் .. ரூ.18,536 தொகுப்பூதியத்தில் சூப்பர் வேலை.. விவரம் உள்ளே

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பேருந்தில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை சேர்த்து வைத்து அதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார அந்த பெண். இந்த வீடியோ சமூல வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்ட வெற்றியை குறிக்கும் வகையில் பயணச் சீட்டுக்களை கொண்டு முதல்வரின் ஓவியத்தை வரைந்து அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி