தொழில் அதிபர்களின் ஆதரவோடு விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் கைது…

Asianet News Tamil  
Published : Nov 23, 2016, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
தொழில் அதிபர்களின் ஆதரவோடு விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் கைது…

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விடுதியில், தொழில் அதிபர்களின் ஆதரவோடு, விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை காவலாளர்கள் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் மணி நகரில் வட மாநில பெண் விபசாரத்தில் ஈடுபட்டதாக மத்திய பாகம் காவல் நிலையத்தில் விடுதி மேலாளர் புகார் அளித்துள்ளார்.

புகாரைத் தொடர்ந்து, காவலாளர்கள் அந்த இடத்தை இரகசியமாக பார்வையிட்டனர். பின்னர், அவர்கள் விசாரித்து ஏஎஸ்பி-க்கு தகவல் கொடுத்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி காவலாளர்களுக்கு ஏஎஸ்பி உத்தரவிட்டார்.

உடனே, மத்தியபாகம் காவலாளர்கள் அந்த விடுதியை முற்றுகையிட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர். பின்னர், அந்த விடுதியில் இருந்த அந்த பெண்னை, காவலாளர்கள் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை காவல் எஸ்.ஐ.சங்கரேஸ்வரி நடத்தினார்.

அதில் அந்த பெண் வடமாநில பெண் என்றும், இவருக்குத் தூத்துக்குடி தொழில் அதிபர்கள் அறை எடுத்து கொடுத்துள்ளனர் என்றும் தெரியவந்தது. மேலும், குறிப்பிட்ட அந்த விடுதிக்கு, அந்த பெண்ணைப் பார்க்க அதிகமாக ஆண்கள் வந்து சென்றதாக விடுதி மேலாளர் தெரிவித்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்ணை குறிப்பிட்ட இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
TVK Vijay: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் தரமான பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்