கோவையில் நாயை ஏவி சிறுமியை கடிக்க செய்த கொடூர பெண்.! சிறையில் அடைத்த போலீஸ்

Published : May 06, 2025, 03:15 PM IST
கோவையில் நாயை ஏவி சிறுமியை கடிக்க செய்த கொடூர பெண்.! சிறையில் அடைத்த போலீஸ்

சுருக்கம்

கோவையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்ததில் பலத்த காயம். -நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

பொதுமக்களை கடிக்கும் வளர்ப்பு நாய்கள்

நாய்கள் வீட்டுக்கு வீடு வளர்ப்பது பேஷனாகி விட்டது. ஆனால் நாயை உரிய வகையில் பயிற்சி கொடுக்காமலும், உரிய பாதுகாப்பு இல்லாமல் வளர்ப்பதாலும் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் அனுபவித்து வருகிறார்கள். பெரும்பாலும் மக்கள் கூடும் இடங்களுக்கு நாய்களை வாய் கவசம் அணித்து கூட்டி வரவேண்டு, கழுத்தில் கயிறு கட்டியிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனையும் மீறி பொது வெளியில் சாதாரணமாக நாய்களை அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பலத்த காயம் அடைந்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கோவையில் சிறுமியை கடித்த நாய்- உரிமையாளர் கைது

இதே போல ஒரு நிகழ்வு கோவையில் நடைபெற்றுள்ளது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கோவை அம்மன் குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் ஹோட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வரும் பொன்வேல் ( வயது 33 ) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இவருடைய  5 வயது மகள் அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த பெண்

விடுமுறை காரணமாக சிறுமி அப்பகுதியில் விளையாடி வந்துள்ளார்.  இதில் பொன்வேல் வீட்டின் அருகில் கண்ணன் என்பவரது மனைவி சௌமியா குடும்பத்துடன் வசித்து வருகிறார். சௌமியா வீட்டில் 4 நாய்களை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று  பொன்வேலின் 1ஆம் வகுப்பு படிக்கும் மகள் வீட்டின் அருகில் விளையாடியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  சௌமியா  நாயை  ஏவி விட்டு அவரை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.

நாய் உரிமையாளர் கைது

இதைதொடர்ந்து பொன்வேல் , கோவை ராமநாதபுரம் காவல்  நிலையத்தில்  சிறுமியை நாய் கடித்தது தொடர்பாக புகார் அளித்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் , சௌமியா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமிய நாய் கடித்தது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ,  அவர்கள் அந்த  நாயை காப்பகத்திற்கு கொண்டு சென்று பராமரித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

PM Kisan Update: விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்? 24-வது தவணை எப்போது? இதோ அப்டேட்
Government Employees : அரசு ஊழியர்கள் கைல எவ்ளோ காசு எடுத்துட்டு போலாம் தெரியுமா?