வீடே இல்லை ஆதார் மட்டும் எதுக்கு; அதையும் நீங்களே வெச்சிக்கோங்க! – குறவர் இன மக்கள் போராட்டம்…

Asianet News Tamil  
Published : Jun 03, 2017, 06:51 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
வீடே இல்லை ஆதார் மட்டும் எதுக்கு; அதையும் நீங்களே வெச்சிக்கோங்க! – குறவர் இன மக்கள் போராட்டம்…

சுருக்கம்

without house why we having aadharr take it back People Struggle

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நாற்பது ஆண்டுகளாக வீடுகள் இல்லாமல் இருப்பதற்கு நடவடிக்க்கை எடுக்காததால் ஆதார் அட்டையை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் குறவர் இன மக்கள் இறங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த நேரலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது வள்ளிநகர். இங்கு குறவர் இனத்தைச் சேர்ந்த 40 குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கார்வேபுரத்தில் 70 குடும்பங்களைச் சேர்ந்த குறவர் இன மக்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு கடந்த 40 ஆண்டுகளாக வீடுகள் இல்லை. பட்டாவுடன் கூடிய வீடுகளை கட்டித்தர வேண்டி, தமிழ்நாடு மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில், மக்களைத் திரட்டி கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடத்தினர். ஆனாலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், நேற்றுக் காலை இந்த இரண்டுக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் திரளாக கூடி தங்களது ஆதார் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தை கையிலெடுத்து உதவி ஆட்சியரிடம் வந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அங்கு வந்த காவலாளர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். “உதவி ஆட்சியர் ஜமாபந்திக்கு சென்றுள்ளதால் மனுவை கொடுத்துவிட்டு செல்லுங்கள்” என்று கூறினர்கள்.

இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மோகன்தாசிடம் அம்மக்கள் மனுவை அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் பாதுகாப்பு கழகத்தின் மாநிலத் தலைவர் வர்ஜீனியா பெர்னடின் கூறியது:

ஒவ்வொரு முறையும், அடிப்படை வசதி செய்யக்கோரி மனு அளிக்க வரும்போது காவலாளர்கள் மக்களை தடுத்து நிறுத்துகின்றனர். இந்தமுறை அளித்துள்ள மனுவின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இனி ஓடவும் முடியாது..! ஒளியவும் முடியாது.! அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Tamil News Live today 30 December 2025: பைக், ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம் தெரியுமா?