
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் அதிகரித்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதாவது:-
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்தது. ஒவ்வொரு நாளும் 100 டிகிரியை தாண்டியே, கணக்கீடு செய்யப்பட்டது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
வெயிலின் தாக்கத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாக இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருத்தணியில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.