
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தனர். அதில் யாருக்கும் காயம் ஏற்படவோ, உயிர் சேதம் ஏற்படுவதையோ தடுக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டிடம் இடிக்கும் முன்பே 50 மீட்டர் தூரத்துக்கு தடை விதித்தோம். கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கிய பின்னர், சிறிது சிறிதாக அருகில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தி.நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி அதற்கான பணிகள் நடக்கும்.