அதிமுக எம்பி வைத்திலிங்கம் திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

 
Published : Jun 05, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
அதிமுக எம்பி வைத்திலிங்கம் திடீர் உடல் நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

சுருக்கம்

Admk MP vaithiyaligam had sudden health problem admitted in hospital

அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்பியுமான வைத்திலிங்கம்  உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம்  (55). அதிமுக முன்னாள் அமைச்சர். மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.

நேற்று முன்தினம் காலை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வைத்தியலிங்கம் புறப்பட்டார். அப்போது, அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனாலும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு, உடல்நிலை மோசமானது. உடனே அங்கிருந்தவர்கள், தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதித்தது. உடனடியாக அவர், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அலைச்சல் ஏற்பட்டதால், சாதாரண காய்ச்சல் மட்டுமே. பயப்பட வேண்டியது இல்லை என்றனர்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!