உச்சநீதிமன்றத்தை மதிக்காததால் சூறையாடப்பட்ட ஒயின் ஷாப் - தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்

 
Published : Apr 04, 2017, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
உச்சநீதிமன்றத்தை மதிக்காததால் சூறையாடப்பட்ட ஒயின் ஷாப் - தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்

சுருக்கம்

wine shop attacked due to ignore the supreme court order

தாம்பரம் அடுத்த சேலையூர் பாரத் நகர், அகரம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடைகள் இருந்தன. இதனால், குடிமகன்கள் சாலையிலேயே போதையில் தள்ளாடி செல்வார்கள். அவ்வழியாக நடந்து செல்வோரிடம் தகராறில் ஈடுபடுவார்கள்.

அந்த பகுதியில் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதையொட்டி, இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பலமுறை போராட்டமும் நடத்தினர்.

இதைதொடர்ந்து உச்சநீதிமன்றம், மார்ச் 31ம் தேதிக்குள் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சேலையூர் பகுதி, அகரம் மெயின்  ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை (கடை எண் 4130) தொடர்ந்து செயல்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பெண்கள் உள்பட சுமார் 300 பேர் நேற்று இரவு மேற்கண்ட டாஸ்மாக் கடை முன் திரண்டனர். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர்.

பின்னர், சாலைகளில் இருந்த கற்களை எடுத்து வீசி, டாஸ்மாக் கடையை சூறையாடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, பாரில் குடித்து கொண்டித்து குடிமகன்கள், பொதுமக்களின் ஆவேசத்தை கண்டு அலறியடித்து கொண்டு, தலை தெறிக்க ஓடினர்.

தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, கோர்ட் உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என கோஷமிட்டனர். அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!
Pongal Gift: பொங்கல் பரிசு 5,000 ரூபாய்?.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்.. இல்லத்தரசிகள் குஷி!