
நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் தானியங்கி கதவுகளை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அச்சிடப்பட்ட ரயில் டிக்கெட்டுகளில் பார்கோடு மற்றும் ஸ்கேனிங் டிக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது.
ரயில்வே துறையில் இம்முறை அமல்படுத்தப்பட்டால் பிளாட்பாஃம் மற்றும் ரயில்களில் டிக்கெட் இன்றி திருட்டுத்தனமாக பயணம் செய்யவும் முடியாது.
நாள் ஒன்றுக்கு நாட்டில் ஆயிரக்கணக்கான பயணிகள், டிக்கெட் இன்றி பயணம் செய்வதாக ரயில்வே துறைக்கு தெரியவந்ததை அடுத்து, இந்த புதிய நடைமுறையை கொண்டு வர உள்ளனர்.
டிக்கெட்டுகளை பரிசோதிக்கும் வகையில் பார்கோடு ஸ்கேனர்களுடன் கூடிய தானியங்கி கதவு அமைக்கப்படும்.
டிக்கெட் பரிசோதனையை விரைவுபடுத்தவும், அவர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் நுழையவோ அல்லது வெளியேறவோ அச்சிடப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.