தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை.. வானிலை அப்டேட்

Published : Sep 23, 2022, 02:12 PM IST
தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை.. வானிலை அப்டேட்

சுருக்கம்

தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக,

23.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌.

24.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌ ‌.

25.09.2022 முதல்‌ 27.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌ ‌

மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு !! பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. அக்.6-ல் கலந்தாய்வு

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! பிப்ரவரி 18ம் தேதிக்குள்.. அரசு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சி.! ஞாயிற்றுக்கிழமை இன்று மற்றும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!