வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக செப்.26 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதனால் வருகிற 26 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் வருகிற 26 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்கள், விவாதிக்கப்பட வேண்டியவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
மேலும் படிக்க:வரும் 26 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சட்டப்பேரவை விவாதம் குறித்து முக்கிய ஆலோசனை..
இதனைதொடந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அக்டோபர் மாதத்தில் வட கிழக்க பருவமழை தொடங்கும் என்பதால், வடிகால் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளனர்.
சென்னை முழுவதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், இந்த மாதத்தில் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: மாணவர்கள் கவனத்திற்கு !! பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. அக்.6-ல் கலந்தாய்வு