மாணவர்கள் கவனத்திற்கு !! பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. அக்.6-ல் கலந்தாய்வு
பி.எட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நாளை தொடங்குகிறது. மாணவர்கள் tngasaedu.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் அக்.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 பாடப் பிரிவுகளுக்கு இளநிலைப் பட்டம் பெற்றவர்களும் பொருளியல், வணிகம், அரசியல் அறிவு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் பி.எட் படிப்புகளுக்கு அனைத்து வகை கல்லூரிகளிலும் அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எட் பட்டப் படிப்பு சேர விரும்பும் மாணவர்களில் பட்டியலினத்தவர்கள் 40% , மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப்பிரிவினர் 50% மதிப்பெண்களில் இளங்கலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:முதல்வர் தொடங்கி வைத்த சூப்பர் திட்டம்.! 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வசதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதற்கு இணையான படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், அது தொடர்புடைய படிப்புகளில் பிஎட் பட்டப்படிப்பில் சேரலாம். மேலும் மாணவர்கள் அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர www.tngasaedu.in இணையதளம் மூலம் விண்ணப்பப்பிக்க வேண்டும்.
தனியார் கல்லூரிகளில் சேருவதற்கு அந்தந்த கல்லூரிகளின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 6 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். அக் 10-ல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.முக்கியமாக சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:வரும் 26 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்.. சட்டப்பேரவை விவாதம் குறித்து முக்கிய ஆலோசனை..