
பூவும் பொட்டுமாக வாழ்ந்த என்னால் நீங்கள் இல்லாமல் வாழ முடியாது சாவிலும் இணைபிரியாமல் சென்னை மைலாப்பூரில் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் பிரகாஷ் துடித்த அவரை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்போது, அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பிரகாஷின் மனைவி உமா மகேஸ்வரி சோகத்தில் உறைந்தார். எப்படியும் கணவரை ப்காப்பற்றியே தீர வேண்டும் என போராடினார். நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்ததால், பிரகாஷ் வேதனையில் துடித்த பிரகாஷை பார்க்கமுடியாமல் கதறினார் உமாமகேஸ்வரி.
இந்நிலையில், நேற்று முன்தினம் உமாமகேஸ்வரி, கோயிலுக்குச்செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றார். இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், மகன் கேசவனின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார் உமாமகேஸ்வரி. அதில், 'அப்பாவை நன்றாகக் கவனித்துக்கொள். நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன்' என எழுதியுள்ளார். இதைப் பார்த்த கேசவன், பிரகாஷ் இருவரும் கதறினர். பிறகு சேகவன், தன்னுடைய உறவினருடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். போலீஸாரும் மாயமான உமாமகேஸ்வரியை தேடி வந்த நிலையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒதுங்கியது.
அந்தப் பெண்குறித்து விசாரித்தபோது, அது உமாமகேஸ்வரி என்று தெரியவந்தது. இதையடுத்து, உமாமகேஸ்வரியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உமாமகேஸ்வரி மாயமான தகவலைக் கேட்ட அதிர்ச்சியில், பிரகாஷின் இறந்துவிட்டாராம். இதையடுத்து, பிரகாஷின் இறுதிஅஞ்சலி நேற்று நடந்தது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனை முடிந்து உமாமகேஸ்வரியின் இறுதி அஞ்சலி இன்று நடந்தது.
இறுதி அஞ்சலி நடந்த நிலையில், 'புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரகாஷுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். இதனால், மனமுடைந்து காணப்பட்ட உமாமகேஸ்வரி அடிக்கடி பிரகாஷிடம், பூவும் பொட்டுமாக வாழ்ந்த என்னால் நீங்கள் இல்லாமல் வாழ முடியாது என்று அழுதுள்ளார். ஒரே நாளில் அப்பாவையும் அம்மாவையும் இழந்த சோகத்தில் மகன் கதறிஅழுதது அழுதுள்ளார். சாவிலும் இணைபிரியாத இந்தத் தம்பதிகுறித்து மந்தைவெளி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.