உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவன்...நள்ளிரவில் கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவி வெறிச்செயல்...

 
Published : May 31, 2018, 05:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவன்...நள்ளிரவில் கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவி வெறிச்செயல்...

சுருக்கம்

wife killed her husband for boyfriend

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக் காதலனோடு சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் அறிவழகன் இவர் கோவையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரேகாவுக்கும் மேல பாதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் கணவன் அறிவழகன் வேலைக்கு சென்றதும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்தவிஷயத்தை கணவன் அறிவழகனிடம் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அறிவழகன் அவர் மனைவி ரேகாவை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவையில் இருந்து அறிவழகன் செம்பனார்கோவிலுக்கு வந்துள்ளார்.

அப்போது கள்ளக்காதலனுடன் மனைவி ரேகா உல்லாசமாக இருந்துள்ளதை பார்த்துள்ளார். இதனால் மனவுளைச்சலுக்கு ஆளான கணவன் அறிவழகன் கண்ணீரோடும், திட்டியும் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

தொடர்ந்து கணவர் அறிவழகன் கள்ளக்காதலுக்கு இடையூறு செய்து வந்ததால் ரேகா ஆத்திரமடைந்தார். இதனால் கள்ளக்காதலன் ராஜசேகரை சந்தித்து கணவர் அறிவழகனை கொல்ல திட்டம் தீட்டினார். அதற்கு ராஜசேகரும் உடன் பட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு மது குடித்து விட்டு அறிவழகன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் குடிபோதையில் மனைவி ரேகாவிடம் அவரது கள்ளக்காதல் குறித்து தரக்குறைவாக திட்டினார். பின்னர் சிறிது நேரம் பேசிய அறிவழகன் அப்படியே தூங்கி விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரேகா, அறிவழகனை கொல்ல முடிவு செய்து கள்ளக்காதலனை செல்போனில் தொடர்புகொண்டு பேசி வரவழைத்தார். இதையடுத்து அங்கு வந்த கள்ளக்காதலன். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அறிவழகனை, தலையணையால் அமுக்கினர். இதில் மூச்சு திணறி அறிவழகன் பரிதாபமாக இறந்தார்.

இருவரும் மாரடைப்பால் கணவன் இறந்ததாக கூறி உறவினர்களை நம்பவைத்து விடலாம் என்று திட்டம் போட்டனர். இந்த ப்ளான் படி ரேகா, கணவன் தூங்கும் போது மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் உறவினர்கள் இன்று காலை அறிவழகன் வீட்டுக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் ரேகா பேச்சில் சந்தேகம் அடைந்தனர்.

இதனால் அறிவழகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் மயிலாடுதுறை போலீசார் அறிவழகன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரேகாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து போலீசார் ரேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் ராஜசேகரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கணவரை கொன்ற சம்பவம் அந்தபகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!