கணவன் இறந்த துக்கம் தாங்காத மனைவி உயிரிழப்பு… வேலூரில் நிகழ்ந்த சோக சமபவம்!!

Published : Sep 11, 2022, 09:21 PM IST
கணவன் இறந்த துக்கம் தாங்காத மனைவி உயிரிழப்பு… வேலூரில் நிகழ்ந்த சோக சமபவம்!!

சுருக்கம்

வேலூரில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூரில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கௌதம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர். கூலி வேலை செய்து வரும் அவருக்கு அஞ்சலி என்ற மனைவியும்  இரண்டு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக  சேகருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சையில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி அவரது குடும்பத்தை கவலையில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: கல்குவாரிக்கு எதிராக புகார்...! லாரியை ஏற்றி கொலை... துடி துடித்து பலியான விவசாயி

குறிப்பாக அவரது மனைவி அஞ்சலி அவரது உடலுக்கு அருகே அமர்ந்து அழுதபடி இருந்துள்ளளார். இதனிடையே இன்று காலை சேகரின் மனைவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கணவர் சேகரின் உடலுக்கு அருகே மயங்கி  விழுந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பரமக்குடியில் ரயில் எஞ்சின் மீது ஏறிய இளைஞர்... கொடியசைத்தபோது தாக்கிய மின்சாரம்.. பதறவைக்கும் காட்சிகள்

இதனை அடுத்து அஞ்சலியின் உடலும் அவரது கணவர் சேகரின் உடலுக்கு அருகில்  வைக்கப்பட்டது. கணவன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் உடல்கள் அலங்கரிக்கப்பட்ட ஒரே பல்லக்கில் வைத்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்வையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்